உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியில் மாபெரும் தூய்மை பணி

Update: 2023-03-27 09:44 GMT
  • தூய்மை பணியின் போது தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
  • பசுமை திட்டத்தின் சார்பில் மரக்கன்று நட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியில் நகர தூய்மை இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற மாபெரும் தூய்மை பணி நடைபெற்றது.

பாலக்கோடு செயல் அலுவலர் டார்த்தி தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியின் போது தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நடவடிக்கை, துண்டு பிரசுரம் வினியோகம், பசுமை திட்டத்தின் சார்பில் மரக்கன்று நட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

பொது இடங்களில் மாபெரும் தூய்மை பணி, பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள பொது இடங்களில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றம் பணி, தெருக்களில் குப்பை பிரித்து வழங்கும் விழிப்புணர்வு நடவடிக்கை, மழைநீர் வடிகால் தூய்மை பணி, உள்ளிட்ட மேற்படி பணிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News