உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட பெயிண்டர் சுடலைமணி.

தூத்துக்குடி வாலிபர் கொலையில் பெயிண்டர் கைது

Published On 2023-06-20 08:54 GMT   |   Update On 2023-06-20 08:54 GMT
  • நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
  • இதில் ஆத்திரமடைந்த சுடலைமணி, கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களுக்கு கணேசன் (18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

வாலிபர் கொலை

சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, கணவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைமணிக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த சுடலைமணி, கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

பெயிண்டர் கைது

இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கங்கைநாத பாண்டியன், சேகர் மற்றும் போலீசார் சுடலைமணியை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, கணேசன் தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே கொலை செய்ய திட்டமிட்டடேன்.

சம்பவத்தன்று சாலையில் நின்று கணேசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற எனக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்துவிட்டார் என்றார்.

இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News