லாரி கவிழந்ததால், மாற்று சாலையில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.
ஆத்தூர் பைபாஸ் சாலையில் கவிழ்ந்த சிமெண்ட் கண்டெய்னர் லாரியை அகற்ற முடியாமல் தவிப்பு
- அரசு சிமெண்ட் தொழிற்சாலைக்கு, ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
- எதிர்பாராத விதமாக மேம்பாலத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பெரம்ப லூர் அரசு சிமெண்ட் தொழிற்சாலைக்கு, ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
புறவழிச் சாலை மேம்பா லத்தில் சென்றபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக மேம்பாலத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளை செய்ய முடியவில்லை.
மேலும் 60 டன் எடை கொண்ட ராட்சத லாரி என்பதால், ஆத்தூரில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு அகற்றும் முயற்சி யில் ஈடுபட்டனர். ஆனால் லாரியை நகர்த்த முடிய வில்லை. லாரியின் எடை அதிகமாக இருந்ததால் அதிலிருந்து சிமெண்ட் சாம்பலை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து, நகர்த்த முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் பலன் அளிக்க வில்லை.
இதை யடுத்து கள்ளக்கு றிச்சி, சேலம் ஆகிய பகுதி யிலிருந்து நேற்று ராட்சத கிரேன்கள் கொண்டு வரப்பட்டு, மொத்த 3 ராட்சத கிரேன்கள் மூலம் இந்த கண்டெய்னர் லாரியை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 36 மணி நேரத்திற்கு மேலாக, லாரியை மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சேலம் - சென்னை நெடுஞ்சாலை என்பதால் இந்த வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் நகரப் பகுதிக்குள்ளும் காட்டுப் பகுதிக்கும் திருப்பி விடப்பட்டு உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் எந்த வழியே செல்ல முடியும் என தெரியாமல் தவித்து வருகின்றனர்.