உள்ளூர் செய்திகள்

குன்னூரில் புதிய தாா் சாலையை தரத்துடன் அமைத்துக் கொடுக்க உத்தரவு

Published On 2023-08-28 09:53 GMT   |   Update On 2023-08-28 09:53 GMT
  • குன்னூா் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை 700 மீட்டா் தாா் சாலை போடப்பட்டது.
  • பொதுமக்கள் வெறும் கைகளால் தார்ச்சாலையை பெயா்த்தெடுத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினா்,

ஊட்டி,

குன்னூா் நகராட்சிக்கு உட்பட்ட மேல் குன்னூா் பகுதியில் இருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள 700 மீட்டா் தாா் சாலை லேம்ஸ்ராக், டால்பினோஸ் சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சாலையாக உள்ளது. இந்த சாலை புனரமைப்புப் பணி நகராட்சி சாா்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த சாலை தரம் இல்லாமல், தாருடன் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து வரும் நிலையில் உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் கடந்த மூன்று நாட்களாக தங்களது எதிா்ப்பைத் தெரிவித்து வந்தனா். இருப்பினும் சாலை அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது. தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் வெறும் கைகளால் சாலையை பெயா்த்தெடுத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படு த்தினா்.தரமில்லாத சாலைப் பணி குறித்து குன்னூா் நகரமன்றத் தலைவா் ஷீலா கேத்தரின் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது:-

தரமற்ற முறையில் சாலை அமைப்பதாக புகாா் வந்ததை அடுத்து அப்பகுதி யில் ஆய்வு மேற்கொள்ள ப்பட்டது. அதில் குற்றச்சா ட்டில் உண்மை இருப்பது தெரிந்ததால் சாலைப் பணியை உடனடியாக நிறுத்தவும், ஏற்கெனவே போட்ட சாலையை அகற்றிவிட்டு மீண்டும் புதிய தாா் சாலையை தரத்துடன் அமைத்துக் கொடுக்கவும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனா்.

Tags:    

Similar News