உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பில்லனகுப்பம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முழு பயனாளி பங்களிப்பு தொகை செலுத்திய நபர்களுக்கு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

ரூ.2.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை

Published On 2022-06-12 14:52 IST   |   Update On 2022-06-12 14:52:00 IST
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாசிக்க பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினர்.
  • முழு தொகை செலுத்தியவர்கள் ஆணைகளை பெற்றனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பில்லனகுப்பம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முழு பயனாளி பங்களிப்பு தொகை செலுத்திய 26 பயனாளிகளுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு களுக்கான ஒதுக்கீடு ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், பில்லனகுப்பம் திட்ட பகுதியில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.47.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இதுவரை 137 பயனாளிகளுக்கு முதல்கட்டமாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று குடியிருப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது இரண்டாம கட்டமாக தலா ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் என மொத்தம் 26 குடியிருப்புகளுக்கு ரூ.2 கோடியே 32 லட்சம் மதிப்பில் கட்டபட்டுள்ள அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும், ஒரு வரவேற்பறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை ஆகியவற்றுடன் கட்டப்படடுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News