கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு
- கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஜீவன் ரக்ஷா பதாக் தொடர் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதானது துணிச்சல் மிகுந்த பாராட்டுதலுக்குறிய செயல்கள் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மனித உயிர்களை காப்பாற்றும் பொருட்டு நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியவர்கள், தீ விபத்தில் சிக்கியவர்கள், மின்சார விபத்து நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்றியவர்களுக்கு இவ்விருதானது மூன்று வகைகளாக வழங்கப்படுகிறது. சர்வோட்டம் ஜீவன் ரக்ஷாபதாக், உத்தம் ஜீவன் ரக்ஷாபதாக, ஜீவன் ரக்ஷாபதாக் மேற்கண்ட வகைகள் கொண்ட விருதுகள் பெற தகுதியுடையவர்கள் மாவட்ட சமூகநல அலுவலகம் ,அரசுசேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்ற விலாசத்தில் விண்ணப்பங்கள் பெற்று 30 ந்தேதி க்குள் கருத்துருக்களை சமர்ப்பிக்குமாறு கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.