தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், மண்டல இணைப்பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) சந்தானம், நிலுவையில்லா (ஜீரோ பேலன்ஸ்) சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மகளிருக்கு வழங்கிய காட்சி.
தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்
- கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலுவையில்லா கணக்கு (ஜீரோ பேலன்ஸ்) உடனடியாக கணக்கு துவக்க வேண்டும்.
- அனைத்து ரேஷன் கடைகளிலும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 43 கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தருமபுரி,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலுவையில்லா கணக்கு (ஜீரோ பேலன்ஸ்) உடனடியாக கணக்கு துவக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்தும் பொருட்டும், அரசின் மானியத்திட்டத்தின் பயன் மற்றும் நவீன வங்கிசேவைக்கான ஏடி.எம். மைக்ரோ ஏடி.எம், கியூ ஆர் கோடு, மொபைல் பேங்கிங், ஐஎம்பிஎஸ், யுபிஐ ஆகியவற்றின் பயன் அனைத்துத்தரப்பு மக்களையும் சேரும் வகையிலும் வங்கிகளில் நிலுவையில்லா (ஜீரோ பேலன்ஸ்) சேமிப்பு கணக்கு துவங்க ஏதுவாக தருமபுரி மாவட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 43 கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்துடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் மற்றும் குடும்பத் தலைவிகள் உடனடியாக நிலுவையில்லா கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.
இதையொட்டி தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், மண்டல இணைப்பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) சந்தானம், நிலுவையில்லா (ஜீரோ பேலன்ஸ்) சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மகளிருக்கு வழங்கினார். இதில் வங்கியின் பொதுமேலாளர் (பொ), உதவி பொது மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர் உள்ளனர்.