உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாகையில், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு

Published On 2023-03-08 12:27 IST   |   Update On 2023-03-08 12:27:00 IST
  • அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
  • தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட டாடா நகர், சேவாபாரதி காமராஜ் நகர், நாகூர் அமிர்தா நகர் ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அங்கன்வாடி மையத்தின் புதிய கட்டிடங்களை, கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர்கெளதமன் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நாகை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகராட்சி ஆணையர்ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், தியாகராஜன் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News