உள்ளூர் செய்திகள்

சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் நடை பெற்றது

மனோரா சுற்றுலா தலத்தில் மேலும் ஒரு படகு சவாரி

Published On 2022-11-19 09:32 GMT   |   Update On 2022-11-19 09:32 GMT
  • பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
  • அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.வட்டாரவளர்ச்சி அலுவலர் வெ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் ஒன்றியகுழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அருள்நம்பி, சாகுல்ஹமீது, செய்யது முகமது, சுதாகர், பாமா, அமுதா, அருந்ததி, ராஜலட்சுமி ஆகியோரும், அதிமுகவை சேர்ந்த சிவ.மதிவாணன் (ஓபிஎஸ்அணி), மீனவராஜன், கருப்பையன், கவிதா, உமா (அதிமுக எடப்பாடி அணியை சார்ந்தவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.

மனோரா சுற்றுலா தலத்தில் கூடுதலாக ஒரு படகு இயக்கப்படும் எனவும், மேலும் ஒரு கழிப்பறை கட்டப்படும் எனவும் தெரிவித்தனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.சடையப்பன் (கி.ஊ) நன்றி கூறினார்.

Tags:    

Similar News