உள்ளூர் செய்திகள்

குடிநீர் தரத்தை அறிய ஒருநாள் இலவச குடிநீர் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும்

Published On 2023-08-14 15:52 IST   |   Update On 2023-08-14 15:52:00 IST
  • கூட்டத்திற்கு துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
  • ராம்சந்த் முதல் சக்திமலை செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க செய்யவேண்டும்

அரவேணு,

நீலகிரி கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

பொருளாளர் மரியம்மா, துணை தலைவர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் செயலாளர் முகமது சலீம் அமைப்பின் கடந்த மாத செயல்பாடுகள் மற்றும் வரும் காலங்களில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாணவர்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு வகுப்பு நடத்துவது.

வன விலங்குகள் ஆபத்து இருப்பதால் நகரின் முக்கிய பகுதிகளில் புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது.

கோத்தகிரி பகுதியில் உள்ள குடிநீர் தரத்தை அறிந்து கொள்ள ஒரு நாள் இலவச குடிநீர் பரிசோதனை முகாம் நடத்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவது, ராம்சந்த் முதல் சக்திமலை செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஆலோசகர் பிரவின், செயற்குழு உறுப்பினர்கள் தெரசா, பியூலா, சங்கீதா, ரோஸ்லின், ஷாஜகான், பிரேம் செபாஸ்டியன், விபின் குமார், சுரேஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் பீட்டர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags:    

Similar News