உள்ளூர் செய்திகள்

பேரிஜம் ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்.

மீண்டும் யானைகள் முகாம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

Published On 2023-09-11 07:05 GMT   |   Update On 2023-09-11 07:05 GMT
  • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
  • யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், குணாகுகை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தபோதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியின் நடுவே குளிர்ந்த காற்றுடன் ஏரிப்பகுதியில் பயணம் மேற்கொள்வது புத்துண ர்ச்சியை தருகிறது. பேரிஜம் ஏரிக்கு செல்ல மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். வனப்ப குதியை ஒட்டி யுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதி யில் முகாமிட்டு வருகின்றன.

குறிப்பாக யானைகள் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று பேரிஜம் ஏரியில் தடை விதிக்கப்பட்டது. யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரி வித்தனர்.

Tags:    

Similar News