உள்ளூர் செய்திகள்

வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம் நடந்த போது எடுத்த படம்.

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-08-31 09:20 GMT   |   Update On 2023-08-31 09:20 GMT
  • திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
  • விழாவையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நே ஷனல் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆசிரியர்கள் கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் வரவேற்றார். ஆசிரியர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இரு அணிகளாக பிரிந்து மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டு கேரள பாரம்பரிய நடனம் ஆடினார்கள். ஓணம் பண்டிகையின் சிறப்புகளை உரையாகவும், விழாவினை கொண்டாடு வதற்கான காரணத்தை குறுநாடகமாகவும் தனது பேச்சாற்றல் மற்றும் நடிப்பாற்றல் மூலம் மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாணவிகளின் நடனம் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ் மற்றும் முதல்வர் எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News