உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பூஜை பொருட்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்

Published On 2022-09-01 15:16 IST   |   Update On 2022-09-01 15:16:00 IST
  • கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர்.
  • அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நக ராட்சி வார்டு எண்.31 பகுதிக்குட்பட்ட சீனிவாசா காலனி பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் வேலுமணி தலைமையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்ததையொட்டி காலை அந்த சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. இதற்கான பூஜை பொருட்களை மிலாடி நபி விழாக்குழுவினரும், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர். பின்னர் அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், ரியாஸ், ஜாமீர், யஹ்யா, அஷ்ரப், பப்லு, ஜாபர்ஜெலீல், அப்பாஸ், முனீர், ஜுபேர், முன்னா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 12ஆண்டுகளாக நடை பெறும் இந்த நிகழ்ச்சியை பார்த்த இந்து மதத்தினர், இஸ்லாமியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்ஜெ-யில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதே போல், கிருஷ்ண கிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோயிலில் வெண்ணை அலங்காரத்திலும், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்கா ரத்திலும், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்திநகர் வலம்புரி விநா யகர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநா யகர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

இரண்டு ஆண்டு களுக்கு பிறகு எந்த கட்டுப்பாடுகளுமின்றி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News