மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்த அ.தி.மு.க.வினர்.
இன்று நினைவு தினத்தையொட்டி நெல்லையில் ஒண்டிவீரன் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
- ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை நீதிமன்றம் எதிரே மணிமண்டபத்தில் அமைக் கப்பட்டுள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாலை அணிவித்து மரியாதை
இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், மாணவர் அணி செயலாளர் சிவபாலன், பகுதி செயலாளர்கள் ஜெனி, சண்முககுமார், முன்னாள் பகுதி செயலாளர் தச்சைமாதவன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன்,
மேலப்பாளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், டால் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எழுச்சி மாநாடு
தொடர்ந்து அவர்கள் மதுரை வலையங்குளத்தில் இன்று நடைபெறும் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றனர்.