உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மெக்ஐவரின் 147-வது நினைவு தினத்தையொட்டி மலா் வளையம் வைத்து அஞ்சலி

Published On 2023-06-09 08:47 GMT   |   Update On 2023-06-09 08:47 GMT
  • ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரிட்டனை சோ்ந்த மெக்ஐவா் என்பவரால் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகள் அப்போது தொடங்கப்பட்டு பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டு 1867-ல் பணி நிறைவடைந்தது.

சுமாா் 19 ஆண்டுகள் அயராது உழைத்து அரசு தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக திகழ்ந்த மெக்ஐவா் கடந்த 1876-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி இறந்தாா்.

ஊட்டியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் ஆலயத்தில் அவரது நினைவிடம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் தோட்டக்கலைத் துறை சாா்பில் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவருடைய 147-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்க ப்பட்டது. இதையொட்டி தோட்டக் கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலா மேரி மற்றும் அதிகாரிகள் அவரது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். பின்னா் ஆலய பங்குத் தந்தை சிறப்புப் பிராா்த்தனை நடத்தினாா்.

Tags:    

Similar News