உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

ஜான்பாண்டியன் பிறந்தநாளையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-12-04 14:33 IST   |   Update On 2022-12-04 14:33:00 IST
  • நெல்லை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென் தலைமை அலுவலகத்தில் 5 மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • 100 நபர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நெல்லை:

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென் தலைமை அலுவலகத்தில் 5 மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, 20 பெண்களுக்கு வாழ்வாதார உதவிக்கு தையல் எந்திரம், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, விவசாயிகளுக்கு மருந்தடிக்கும் எந்திரம், 100 நபர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நலத்திட்ட உதவிகளை நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர், மாநில துணைப் பொதுச்செயலாளர் நெல்லையப்பன், தலைமை நிலைய செயலாளர் சேகர், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கிங்தேவேந்திரன், மானூர் ஒன்றிய செயலாளர் ஆதிபாண்டியன், மாநகர இணை செயலாளர் சின்னத்துரை, கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், மானுர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பாளை ஒன்றிய செயலாளர் யாபேஸ்பாண்டியன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் நாதன், டவுன் பகுதி செயலாளர் சங்கர், முத்து வளவன், செல்வகுமரன், மகளிரணி செயலாளர் வசந்தி, சர்மிளா சுரேஷ்பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News