உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி நல்லம்பள்ளியில் என்.ஜி. சிவப்பிரகாசம் தலைமையில் கட்சிகொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காட்சி.  

அ.தி.மு.க.வின் 51-வது பொன்விழா ஆண்டையொட்டி நல்லம்பள்ளி ஒன்றியம் முழுவதும் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2022-10-17 15:44 IST   |   Update On 2022-10-17 15:44:00 IST
  • 51 வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி பொன்விழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது.
  • கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தருமபுரி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் 1972 -ம் வருடம் அக்டோபர் மாதம் 17-ம் தேதி மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் முடிந்து 51 வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி பொன்விழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது.

இதில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் இன்று நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள நல்லம்பள்ளி, பாளையம் புதூர், கொமத்தம்பட்டி, பூமரத்தூர், எட்டியானூர் அங்கனாம்புதூர் மானியதள்ளி,பழைய கோட்ரஸ், உள்ளிட்ட பகுதிகளில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாசறை ஒன்றிய செயலாளர் திருமால்வர்மா, தகவல் தொழில் நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் தங்கபாலு,மாணவர் அணி ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய இணைச் செயலாளர் வசந்தா சின்னசாமி, மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News