உள்ளூர் செய்திகள்

மத்தூர் ஊராட்சி சார்பில் பள்ளி மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Published On 2022-08-31 14:55 IST   |   Update On 2022-08-31 14:55:00 IST
  • பெரியவர் முதல் பள்ளி மாணவர்கள் வரை மலம் கழித்து விட்டு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • வீடுகளில் போடும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை தொட்டி வைத்து போட வேண்டும்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி சார்பில் நம்ம ஊறு சூப்பரு, என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மீனா சக்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (கி. ஊ) பள்ளி மாணவர்களிடை சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்தும், குப்பைகளை தெருக்களில் அங்காங்கே போடாமல் அதற்காக வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் போடுதல் குறித்தும், அதேபோல் வீடுகளில் போடும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை தொட்டி வைத்து போடுதல் குறித்தும் அதேபோல் பெரியவர் முதல் பள்ளி மாணவர்கள் வரை மலம் கழித்து விட்டு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவதல், சுற்றுபுரங்களை சுத்தமாகவும்,சுகாதாரமாக வைத்து கொள்ளுதல் அறவே பிளாஸ்டிக் இல்லா இடமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் லோகநாயகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தகுமாரி, குறல்வாணி, சங்கரநாரயணன், பள்ளியின் ஆசிரிய ர்கள்,மக்கள் நல பணியா ளர் ராஜா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Similar News