உள்ளூர் செய்திகள்
கட்டுமான நல தொழிலாளர் வாரியம் சார்பில் நடமாடும் மருத்துவ முகாம்
- நடமாடும் மருத்துவ முகாம் தொழிலாளர் நல உதவி ஆணையர் முத்து மேற்பார்வையில் காரிமங்கலம் யூனியன் முக்குளம் பஞ்சாயத்தில் நடந்தது.
- பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்ட கட்டுமான நல தொழிலாளர் வாரியம் சார்பில் நடமாடும் மருத்துவ முகாம் தொழிலாளர் நல உதவி ஆணையர் முத்து மேற்பார்வையில் காரிமங்கலம் யூனியன் முக்குளம் பஞ்சாயத்தில் நடந்தது.
தொ.மு.ச. தொழிலாளர் நல வாரிய தலைவர் லட்சுமி காந்தன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
இதே போல் காரிமங்கலம் ஒன்றியத்தில் தொடர்ந்து நடக்க உள்ள முகாம்களில் ஊரக வேலை உறுதி அளித்திட்ட பணியாளர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று தொழிலாளர் நல வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.