உள்ளூர் செய்திகள்

 ஆம்னி பஸ்சின் முன்பகுதியில் சிதைந்து இருக்கும் காட்சி. 

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் டிப்பர் லாரி மோதல்: பயணிகள் 10 பேர் காயம்

Published On 2022-08-20 08:13 GMT   |   Update On 2022-08-20 08:13 GMT
  • பஸ் நிலை தடுமாறி அந்த லாரியின் வலது புறத்தில் மோதி மீண்டும் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதியது.
  • விபத்தால் சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்:

சென்னையில் இருந்த தேனிக்கு ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் கருப்புசாமி ஓட்டி வந்தார். இந்த பஸ் நேற்று இரவு 4 மணி அளவில் விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி அருகே உள்ள அழுக்கு மேம்பாலம் மேலே சென்று கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பே சென்று கொண்டிருந்த ஒரு டிப்பர் டாரஸ் லாரி திடீரென இடது புறத்தில் இருந்து வலது புறம் வந்தது. அப்போது பின்னால் சென்ற பஸ் நிலை தடுமாறி அந்த லாரியின் வலது புறத்தில் மோதி மீண்டும் மேம்பாலத்தின் தடுப்பு கட்டையில்மோதியது. இந்த விபத்தில் ஆம்னி பஸ் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில்பஸ் டிரைவர் விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி, பஸ்சில் பயணம் செய்தபயணிகள் கோவி ந்தராஜ், ராஜமாணிக்கம், ராஜாமணி, கண்ணன், ஜெயஸ்ரீ ,மீரா ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் சென்னை திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்கள் உடனடியாக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து ஏற்பட்ட வாகனங்களை சீரமைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News