பிச்சாவரம் கடலில் ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுகளை சிதம்பரம் உட்கோட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி கடலில் விட்டார்.
பிச்சாவரம் கடலில் விடப்பட்ட ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுகள்
- பிச்சாவரம் கடலில், வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன.
- 37 ஆயிரத்து 869 ஆமை முட்டைகள் சேகரம் செய்யப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 337 குஞ்சுகள் கடலில் விடப்பட்டதுள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கடலில், வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன. பிச்சாவரம் வனச்சரகத்தில் கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவின்படி கடல் ஆமை முட்டை பொரிப்பகம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பொரிப்பகத்திலிருந்து 531 ஆமை குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்ததை பிச்சாவரம் வனச்கரக அலுவலர் கமலக்கண்ணன் ஏற்பாட்டின் படி வனவர் அருள்தாஸ் முன்னிலையில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இயற்கை ஆர்வலர் நடராஜ், பிச்சாவரம் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள் பத்ரி நாராயணன், ரூபேஷ் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர். இதுவரை 37 ஆயிரத்து 869 ஆமை முட்டைகள் சேகரம் செய்யப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 337 குஞ்சுகள் கடலில் விடப்பட்டதுள்ளது என வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.