உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
- சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் ராஜாபேட்டை வந்தார்.
- அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வந்து கோவிந்தம்மாள் மீது மோதியது.
தருமபுரி,
தருமபுரி அடுத்த ராஜாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது70). இவர் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் ராஜாபேட்டை வந்தார்.
அப்போது அவர் வீட்டிற்கு நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் வந்து கோவிந்தம்மாள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தம்மாள் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவரை தேடி வருகின்றனர்.