உள்ளூர் செய்திகள்
கோவையில் தண்டவாளத்தில் தலைவைத்து முதியவர் சாவு
- கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்பட தயாராக இருந்தது.
- 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? என விசாரணை நடந்து வருகிறது.
கோவை,
கோவை ரெயில் நிலையத்தில் கடந்த 18-ந் தேதி 5-வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அங்கு சென்ற ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில் முன்பு படுத்துக்கொண்டார். பின்னர் ரெயில் புறப்பட்டபோது ரெயிலில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.