உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

விபத்தில் மூதாட்டி பலி சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது

Published On 2022-09-21 08:08 GMT   |   Update On 2022-09-21 08:08 GMT
  • சிறுவன் ஓட்டிச்சென்ற பைக் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
  • போலீசார் சிறுவன் மற்றும் பைக் ஓட்ட அனுமதித்த தந்தையையும் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள நந்தவனப்பட்டிைய சேர்ந்த சின்னவர் மனைவி அழகம்மாள்(85). இவர் சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதேபகுதியை சேர்ந்த முத்துக்குமார் மகன் நித்திஸ்குமார்(16) என்பவர் ஓட்டிச்சென்ற பைக் அழகம்மாள் மீது மோதியது.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டிவந்த பள்ளி மாணவனான நித்திஸ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவரை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை முத்துக்குமாரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News