உள்ளூர் செய்திகள்

வரி செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

Published On 2023-03-17 07:23 GMT   |   Update On 2023-03-17 07:23 GMT
  • கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.
  • நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் 1.5 லட்சம் மக்கள் வசிக்கின்ற னர். இதில் 20,300 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 130 லிட்டர் வீதம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், சாக்கடை கட்டணம் உள்ளிட்ட நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி களை செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நாமக்கல் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கி ழமையும் சிறப்பு முகாம் மூலம் வரி செலுத்தும் வசதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த முன் வரவில்லை.

இதனால் வரி செலுத்த முன்வராதவர்களின் வீடு களில் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் அதிரடி காட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு களை நகராட்சி ஊழியர்கள் துண்டித்து வரு வதாக நகராட்சி அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த நடவ டிக்கை மேலும் தீவிரமாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News