உள்ளூர் செய்திகள்

நாயுடுபுரம் பகுதியில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

கொடைக்கானலில் கன மழைக்கு சேதம் அடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி தீவிரம் அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-11-14 05:47 GMT   |   Update On 2022-11-14 05:47 GMT
  • தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.
  • அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும் நாயுடுபுரம் சாலையில் ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறையினர் விரைந்து சென்று மரத்ைத அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.

மேலும் மண் சரிவு ஏற்பட்ட இடங்கள், மரங்கள் முறிந்து கிடந்த பகுதியில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை த்தலைவர் மாயகண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இது குறித்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், கொடைக்கா னலில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆற்று பகுதியை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது. மேலும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags:    

Similar News