உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே ஏரிகளில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-01-21 07:00 GMT   |   Update On 2023-01-21 07:00 GMT
  • ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்கள் மற்றும் 336 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News