உள்ளூர் செய்திகள்

பாறையில் நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதை படத்தில் காணலாம்.  

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட வேண்டும்

Published On 2023-01-10 09:42 GMT   |   Update On 2023-01-10 09:42 GMT
  • காவிரி ஆற்றுப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
  • நீரில் மூழ்கி மரணம் அடையும் சோக சம்பவம் அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது.

தருமபுரி,

தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல்லில் நாள்தோறும் ஆயிர க்கணக்கான சுற்றுலா பய ணிகள் வருகை தருகின்றனர்.

இது தவிர சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாகவும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி களும் வருகை தருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து ஒகேனக்கல் அருவியில் குளித்து பரிசலில் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்து ஒகேன க்கல்லில் மீன் உணவை உண்டு ரசித்து மகிழ்வது வழக்கம்.

குறிப்பாக இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் பிரதான அருவி பகுதிகளிலும் சினி பால்ஸ் உள்ளிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.

இதேபோல் கடந்த மே மாதம் 16-ம் தேதி ஐந்தருவி பகுதிக்கு சென்ற பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி என்பவர் பாறைகளின் மீது செல்பி எடுக்க முற்பட்டபோது கால் தவறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

அதேபோல் சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 2015 -ம் ஆண்டு அன்று இங்கு சுற்றுலா வந்த போது காவிரியில் பரிசலில் சென்று செல்பி எடுக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதுபோன்று இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவரது குடும்பத்தார் காவிரியின் அழகை கண்டு ரசிக்கும் ஆர்வத்தில் ஆற்றுப்பகுதிகளிலும் பிரதான அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளிலும் பாறைகளின் மீது நின்று செல்பி எடுக்கும் போது கால் தவறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி மரணம் அடையும் சோக சம்பவம் அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது.

ஆகவே தருமபுரி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீயணைப்பு துறை மற்றும் ஊர் காவல் படையினர் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து ஒகேனக்கல் காவிரியில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், பிரதான நீர்வீழ்ச்சி செல்லும் நடைபா தையிலும் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News