உள்ளூர் செய்திகள்

தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது.

தீத்தொண்டு நாள் அனுசரிப்பு

Published On 2023-04-14 09:43 GMT   |   Update On 2023-04-14 09:43 GMT
  • வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.
  • பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட உள்ளன.

நாகப்பட்டினம்:

மீட்பு பணிகளில்தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் ஏப்ரல் 14ஆம் நாள் தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று நாகை தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அலுலர்கள் மலர்வலையம் வைத்து மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் 14ஆம் தேதி முதல் 20தேதி வரை பொதுமக்கள் கூடும் இடம், மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏர்படுத்தும் வகையில் நிகழ்சிகள் நடத்தபட உள்ளன.

Tags:    

Similar News