உள்ளூர் செய்திகள்

சமூக ஆர்வலர் சரவணன்.

நத்தம் பஸ் நிலையத்தில் சாலையில் தேங்காய், பூசணிக்காய் உடைப்பதை தவிர்க்க நூதன பிரசாரம்

Published On 2023-10-02 11:49 IST   |   Update On 2023-10-02 11:49:00 IST
  • கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலர். இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
  • தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை சாலையில் உடைப்பதை தவிர்த்து. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில் உடைக்கலாம்.

நத்தம்,:

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (45) சமூக ஆர்வலர். இவர் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பஸ் நிலையம், வாரச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்து சாலையில் தேங்காய், திருஷ்டி பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை உடைக்க வேண்டாம் என்றும், சாலை பாதுகாப்பான பயணத்திற்கு மட்டுமே என நூதன முறையில் கையிலும், கழுத்திலும் பதாகைகளை தொங்க விட்டு விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், திருஷ்டி கழிக்க வேண்டும் என சிலர் பூசணிக்காய் மற்றும் தேங்கா ய்களை சாலையிலேயே உடைக்கின்றனர். இதனால் பைக்கில் வரும் நபர்கள் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் நடந்து செல்பவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களை சாலையில் உடைப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில் உடைக்கலாம். இதற்காக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன் என்றார்.

Tags:    

Similar News