உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

Published On 2023-01-03 07:38 GMT   |   Update On 2023-01-03 07:38 GMT
  • மூன்றாம் பருவத்திற்கான “எண்ணும் எழுத்தும்” வட்டார அளவிலான பயிற்சி நடைபெற்று வருகிறது
  • தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3பாடங்களுக்கான பயிற்சி 3 நாட்கள் வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான "எண்ணும் எழுத்தும்" வட்டார அளவிலான பயிற்சி நடைபெற்று வருகிறது 

பல்லடம் ஒன்றியத்தில்1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். பல்லடம் வட்டார கல்வி அலுவலர்கள் சசிகலா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சியிலும் கலந்துகொண்டனர். எண்ணும் எழுத்தும் பயிற்சியின் அவசியம், கற்பித்தல் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கிக்கூறினர்.

தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3பாடங்களுக்கான பயிற்சி 3 நாட்கள் வழங்கப்படுகிறது. மாணவர்களது கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்நாள் பயிற்சியை திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அமுதா பார்வையிட்டு வகுப்பறை கற்றல் கற்பித்தலில் எத்தகைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதன் மூலம் மாணவர்களது கற்றலை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கினர். இப்பயிற்சிக்கு பல்லடம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் அங்கயர்கண்ணி, சாரதா, மாரியப்பன், மதுமிதா, சிந்தியா, ரஞ்சிதம் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

Tags:    

Similar News