உள்ளூர் செய்திகள்

அரூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழா

Published On 2023-10-04 15:54 IST   |   Update On 2023-10-04 15:54:00 IST
  • அரூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் நிறைவு விழா நடைபெற்றது.
  • போலீஸ இன்ஸ்பெக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சித்தேரி ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் முகாமின் மூலம் தூய்மை பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டனர்.

இதனையடுத்து இதன் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் . இணை திட்ட இயக்குநர் சங்கர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு, பேரூராட்சி தலைவர் இந்திராணி, தனபால், துணை தலைவர் சூர்யா, தனபால் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்கள்.

இதில் பேரூராட்சி உறுப்பினர் உமாராணி, முன்னாள் மாணவர்கள் சத்தியபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News