உள்ளூர் செய்திகள்

கைதான சீனிவாசனையும், அவரை கைது செய்த தனிப்படை போலீசாரையும் படத்தில் காணலாம்.

சங்ககிரியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது

Published On 2023-03-27 13:20 IST   |   Update On 2023-03-27 13:20:00 IST
  • செல்வம் (வயது 38). இவர் வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு ரோட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
  • மறுநாள் காலை கடைக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்க கிரி பண்ணை கிணத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் இலக்கிய செல்வம் (வயது 38). இவர் வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு ரோட்டில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 21-ந் தேதி இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை கடைக்கு சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 11 ஆயிரம் பணத்தை காணவில்லை.

நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதேபோல், அருகில் உள்ள மற்றொரு கடையில் ரூ. 3,100 மற்றும் பக்கத்தில் உள்ள பேன்சி கடையில் ரூ. 5,200 பணத்தையும் திருடிச் சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில், சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். அதனையடுத்து, சேலம் எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ.க்கள் சுதாகரன், ஸ்ரீராமன், அருண் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்று சங்ககிரி பள்ளிபா ளையம் பிரிவு தீரன் சின்ன மலை நினைவிடம் அருகே வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஈரோட்டில் இருந்து பஸ்சில் வந்த வாலிபர் ஒருவர் போலீ சாரை பார்த்ததும் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை விரட்டிச் சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில், அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காமராஜ் நகரைச் சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (32) என்பது தெரிந்தது.

மேலும், அவர் கையில் வைத்திருந்த சிவப்பு நிற பையை பார்த்தபோது அதில் இரும்பு ராடு, டார்ச் லைட், திருப்புளி ஆகியவை இருந்தன. அதை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில், சீனிவாசன் கடந்த 21-ந்தேதி, காளிப்பட்டி பிரிவு ரோடு அருகே இரவில் கடைகளை உடைத்து பணத்தை கொள்ளை யடித்தது தெரியவந்தது.

இதைடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். சீனிவாசன் மீது ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News