உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு விதிகளை பின்பற்றாத 4 உரக்கடைகளுக்கு நோட்டீஸ்

Published On 2023-09-30 10:20 IST   |   Update On 2023-09-30 10:20:00 IST
  • உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 195 தொடக்க வேளாண்ைம கூட்டுறவு கடன் சங்கங்கள், 327 தனியார் உரக்கடைகள் என ெமாத்தம் 522 கடைகள் செயல்பட்டு வருகின்றன. ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பருத்தி, மக்காச்சோளம், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் மலர் செடிகளின் தேவைக்காக 3294 டன் யூரியா, 2130 டன் டி.ஏ.பி., 1398 டன் பொட்டாஸ், 9048 டன் கலப்பு உரங்கள், 889 டன் சூப்பர் பாஸ்பேட் என 16760 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த உரங்கள் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுவதை கண்காணிக்கவும், போலி உரங்கள் விற்பனையை தடுக்கவும் மாவட்டத்தில் 14 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் கடந்த 5 நாட்களுக்கு மேலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கடைகளில் வைக்கப்பட்டுள்ள எடை கருவி, கடைகளின் உரிமம், விற்பனை விவரம், இருப்பு விவரம் உள்ளிட்ட 27 வகையான கள அறிக்கை விவரங்களை தனித்தனியாக இந்த குழுவினர் சேகரித்து வருகின்றனர். இந்த சோதனையில் 15 உரக்கடைகள் தரப்பில் உரிமம் புதுப்பிப்பதற்கும், 10 கடைகள் ஓ படிவம் கேட்டும், வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாட்டு அலுவ லகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர்.

இது குறித்து வேளாண் உதவி இயக்குனர் தெரிவிக்கையில், வேளாண்ைம உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர்கள் ஆகியோரை கொண்ட 14 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உர விற்பனையாளர்கள் லாப நோக்கில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News