உள்ளூர் செய்திகள்

சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.


வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : சுரண்டை அரசு பள்ளியில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-11-03 08:58 GMT   |   Update On 2022-11-03 08:58 GMT
  • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
  • சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.

சுரண்டை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கால்வாய்களில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.சுரண்டை சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளிக்கும்.இதனால் பள்ளி தொடர்ந்து ஒரு வாரம் வரை விடுமுறை விடப்பட்டது.இந்த நிலையில் பழனி நாடார் எம்.எல்.ஏ.விடம் பள்ளியில் தரைதளத்தை உயர்த்த கோரிக்கை வைத்திருந்தனர்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் மண் நிரப்பி தரை தளத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது. பழனி நாடார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.தொடர்ந்து கால்வாய்களில் உள்ள அடைப்புகளை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார்.ஆய்வின் போது சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகிமை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார், சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகரமன்ற உறுப்பினர்கள் அமுதா சந்திரன், வேல் முத்து,ஞானதீபம் மனோகர,தேவேந்திரன்,பிரபாகர், மகேந்திரன்,பிரபு, அரவிந்த் கந்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News