உள்ளூர் செய்திகள்

மினி டைடல் பார்க் கட்டுமான பணிகளை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆய்வு செய்தார்.

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டங்களும் கொண்டு வரப்படாது- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Published On 2023-11-25 09:49 GMT   |   Update On 2023-11-25 09:49 GMT
  • இப்பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.
  • தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணியை இன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த டைடல் பூங்கா கட்டுமான பணி இப்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

எனவே, இப்பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.

டெல்டா பகுதியில் படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் இங்கேயே தொழில் தொடங்குவதற்கு ஸ்டார்ட் அப் மையமாக இப்பூங்கா அமையும்.

குறிப்பாக, இப்பூங்கா தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

டெல்டா மாவட்டங்களில் எந்த காலத்தி லும் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தொழில்கள் வராது.

அதே சமயம், இங்கு விவசாயம் சார்ந்த தொழில்பேட்டைகள் நிச்சயமாக கொண்டு வரப்படும்.

படித்த இளைஞர்க ளுக்கு அடுத்த கட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில், தமிழக முதல்-அமைச்சர் முக்கிய நோக்க மாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

எனவே, டெல்டா பகுதியில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில்பேட்டைகளைக் கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் வளர்ச்சி பரவ வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் ஓசூர், தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதே போல தஞ்சாவூரிலும் விமான நிலையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி

நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News