உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

நிபா வைரஸ் எதிரொலி: தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு

Published On 2023-09-26 05:49 GMT   |   Update On 2023-09-26 05:49 GMT
  • கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
  • கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.

கூடலூர்:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2பேர் உயிரிந்தனர். 4பேருக்கு மேல் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழக எல்லைப்பகுதியான குமுளி, கம்பம் மெட்டு, போடி, மெட்டு பகுதிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே தேனி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கேரளா சுற்றுலா பயணத்தை பலரும் ரத்து செய்துள்ளனர். இதனால் கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதேபோல் வாகமன், ராமக்கல் மெட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் இதேநிலை உள்ளது.

இதனால் ஓட்டல், தங்கும் விடுதி, ஜீப் சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News