உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மார்ச் முதல் வாரம் புத்தக திருவிழா

Published On 2023-02-10 09:20 GMT   |   Update On 2023-02-10 09:20 GMT
  • கலெக்டர் அம்ரித் தலைமையில் புத்தக திருவிழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
  • கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், புத்தகத் திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இப்புத்தக திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும். கலை நிகழ்ச்சிக்கான கலையரங்கம், உணவரங்கம் போன்ற சிறப்பம்சங்களுடன் பல்வேறு சிந்தனையாளர்களின் சிந்தனை நிகழ்ச்சிகளும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்புத்தக திருவிழா நடைபெறும் இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கை, விழா அழைப்பிதழ்கள், புத்தக அரங்குகள் தயார் நிலையில் வைத்தல், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தல், உணவகம், தற்காலிக ஆவின் பாலகம் ஏற்பாடு, பழங்குடியினர்களின் பொருட்கள் விற்பனை அரங்கம், பல்வேறு துறைகளின் சார்பில் அரசு திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை தினந்தோறும் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கண்காட்சி நடைபெறும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகளை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாலகணேஷ், மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை பகவத் சிங், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), பூஷணகுமார் (குன்னூர்), ஊட்டி நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பாலுசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலாமேரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் குழந்தைராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவக்குமாரி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News