உள்ளூர் செய்திகள்

திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி வழிபாடு நடந்தது.

புத்தாண்டு பிறப்பு; தேவாலயங்களில் கூட்டு திருப்பலி

Published On 2023-01-01 09:57 GMT   |   Update On 2023-01-01 09:57 GMT
  • கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது.
  • கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

நள்ளிரவு 12 மணிக்கு 2023-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு நன்றி வழிபாடு திருத்தொண்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டில் நடந்த நன்மைகளுக்காக நன்றி செலுத்தப்பட்டது.

மேலும் உலக அமைதிக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றவும் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பின்னர் பேராலய பங்கு தந்தை பிரபாகர் தலைமையில் புத்தாண்டு கூட்டு பாடல் திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்குத்தந்தை பிரவீன் மற்றும் பங்கு பேரவையினர், இளைஞர் மன்றத்தினர் உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

இதேப்போல் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், தஞ்சை குழந்தை ஏசு திருத்தலம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News