உள்ளூர் செய்திகள்

பல்லடம் நகர காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

Published On 2023-02-13 15:42 IST   |   Update On 2023-02-13 15:42:00 IST
  • மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.
  • திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.

பல்லடம் :

பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு மாநிலத் தலைவர் அழகிரி ஒப்புதலுடன் புதிய நிர்வாகிகளை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார்.

இதன்படி பல்லடம் நகர காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர்களாக செந்தில்குமார், சுந்தரிமுருகேசன், அமராவதியப்பன், நகர பொதுச்செயலாளர்களாக கிருஷ்ணகுமார்,உத்திரமூர்த்தி, நகர செயலாளர்களாக முருகன்,கனகராஜ்,சாகுல்அமீது, ராமச்சந்திரன், சபீர்முகமது,பண்ணாரி, நகர பொருளாளராக சுரேஷ், நகர ஆலோசகர்களாக ஏ.பி.முத்துசாமி, சதாசிவம்,அர்ச்சுணன், ப.சக்திவேல்,எம்.மணிராஜ் மற்றும் 18வார்டு கமிட்டி தலைவர்கள்,நகர செயற்குழு உறுப்பினர்கள் 8 பேர் உள்ளிட்ட நிர்வாகிகளை எனது பரிந்துரையை ஏற்று மாநில தலைவர் அழகிரி ஒப்புதலுடன் மாவட்ட தலைவர் கோபி நியமனம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News