உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி மாளிகையில்எழுந்தருளி சேவை சாதித்தார்.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் அமாவாசைசிறப்பு பூஜை
- ஆடி மாத அமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது.
- 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.
கடலூர்:
மிகவும் பிரசித்தி பெற்ற திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (17-ந்தேதி)ஆடி மாதஅமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் பெருமாள் பூவாலங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி சேவை சாதித்தார் இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை 9 மணிக்கு உற்சவர் கண்ணாடி அறை சேவை , 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காக விளக்கேற்றி வழிபாடு செய்தனர் மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பட்டர் ராமன்தலைமையில் விழா குழுவினர், நகரவாசிகள் செய்து வருகின்றனர்.