உள்ளூர் செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீரர் மனைவி கிருஷ்ணவேணியிடம் வீட்டு சாவி ஒப்படைக்கப்பட்ட காட்சி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கயத்தாறு ராணுவ வீரர் குடும்பத்திற்கு புதிய வீடு

Published On 2022-11-03 08:49 GMT   |   Update On 2022-11-03 08:49 GMT
  • கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்
  • கிரடாய் அமைப்பு சார்பாக இலவச வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையம் எதிரே வீடு கட்டும் பணிகள் நடந்து வந்தது

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

அவரது குடும்பத்திற்கு உதவும் விதமாக கிரடாய் அமைப்பு சார்பாக இலவச வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையம் எதிரே ஜின்னா தெருவில் வீடு கட்டும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய வீட்டினை அவர்களது குடும்பத்தினருக்கு அளிக்கும் நிகழ்ச்சிக்கு கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார்.

கயத்தாறு பேரூராட்சிமன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கிரடாய் அமைப்பு மாநில செயலாளர் அபிஷேக் முன்னிலை வகித்தனர். கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், கிரடாய் அமைப்பு மாநில தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் சபுரா சலிமா, கிரடாய் அமைப்பு மதுரை மாவட்ட தலைவர் ரமேஷ் கிருஷ்ணா, செயலாளர் முத்துவிஜயன், நெல்லை மாவட்ட தலைவர் சிவக்குமார் தாஸ், செயலாளர் கோவிந்தன், துணை தலைவர் ரமேஷ் ராஜா, ஒப்பந்ததாரர் செய்யது முகம்மது, பேரூர் கழக செயலாளர் சுரேஷ் கண்ணன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, பேரூர் துணை செயலாளர் குருசாமி, வார்டு கவுன்சிலர்கள் செல்வக்குமார், நயினார் பாண்டியன், செய்யது அலி பாத்திமா, கோகிலா, தேவி, ஆதிலட்சுமி, வக்கீல் மாரியப்பன், கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News