உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இனிப்பு வழங்கிய காட்சி.

குதிரைமொழி ஊராட்சியில் ரூ. 40 லட்சத்தில் புதிய அரசு கட்டிடங்கள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-04-30 14:21 IST   |   Update On 2023-04-30 14:21:00 IST
  • விழாவுக்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.
  • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

உடன்குடி:

உடன்குடி யூனியன் குதிரைமொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சாமிநாதன், உடன்குடி யூனியன் ஆணையாளர் பழனிசாமி, ஊராட்சி தலைவர் சிவசக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக மீன்வளம். மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைசெயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி தலைவரும், உடன்குடி நகர தி.மு.க. செயலாளருமான சந்தையடி மால்ராஜேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட பிரதிநிதிகள் மனப்பாடு ஜெயபிரகாஷ், மெஞ்ஞானபுரம் ராஜபிரபு, முபாரக், ஒன்றிய பொருளாளர் விஜயன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் மோகன், குதிரைமொழி ஊராட்சி செயலாளர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News