உள்ளூர் செய்திகள்
ஓசூர் மாநகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
- ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சினேகா நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
- மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சினேகா நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
2017 பேட்ச் அதிகாரியான இவர், இதற்கு முன்பு கிரேட்டர் சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் இணை ஆணையாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நிருபர்களிடம் புதிய ஆணையாளர் சினேகா கூறுகையில் " ஓசூர் மாநகர மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை புரிந்துகொண்டு, அரசு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படி, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என்று கூறினார்.