உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
திண்டுக்கல்லில் வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர்களுக்கு வலை
- முத்தழகு பட்டி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் கீரை வியாபாரி. இவர் இன்று காலை வழக்கம்போல் வியா பாரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
- பலத்த காயமடைந்த வியாபாரியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகு பட்டி செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த வர் நந்தகுமார்(35). கீரை வியாபாரி. இவர் இன்று காலை வழக்கம்போல் வியா பாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து நந்த குமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.
பலத்த காயமடைந்த வியாபாரியை அக்கம்பக்க த்தில் இருந்தவர்கள் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.