உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் திருமணமான 2 வருடத்தில் நேபாள பெண் மர்மச்சாவு - ஆர்.டி.ஓ. விசாரணை

Published On 2023-05-05 12:35 IST   |   Update On 2023-05-05 12:35:00 IST
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண் கழுத்தில் காயங்களுடன் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார்.
  • திருமணமாகி 2 வருடமே ஆவதால் இளம்பெண் மர்மச்சாவு குறித்து கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைக்கானல்:

நேபாளத்தை சேர்ந்தவர் பானுபய்குரில். இவரது 2-வது மனைவி கெதாரோகையா (19).இவர்கள் பிரகாசபுரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கெதாரோகையா கழுத்தில் காயங்களுடன் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 வருடமே ஆவதால் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News