உள்ளூர் செய்திகள்

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையில் மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம்.

சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் நெல்லை அணி வெற்றி

Published On 2023-01-28 14:29 IST   |   Update On 2023-01-28 14:29:00 IST
  • போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சிங்கம்பாறை அருட்தந்தை அருள்நேசமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
  • முதல் பரிசு, சுழற் கோப்பையையும் நெல்லை ஏ.பி.பி. அணி பெற்றது.

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய 10-ம் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

சிங்கம்பாறையில் அமைந்துள்ள டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு திடலில் நடந்த போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சிங்கம்பாறை அருட்தந்தை அருள்நேசமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில் மொத்தம் 16 அணிகள் மோதின முதல் பரிசு ரூ. 40 ஆயிரத்தையும், சுழற் கோப்பையையும் நெல்லை ஏ.பி.பி. அணி பெற்றது. 2-வது பரிசை மணிமுத்தாறு காவலர்கள் அணி ரூ.30 ஆயிரம் பெற்றது. 3-வது பரிசை கீழப்பாவூர் அணி ரூ. 20 ஆயிரத்தை பெற்றது. 4-வதாக தூத்துக்குடி துரைசிங்கம் அணி ரூ.15 ஆயித்தையும் பெற்றன.

நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி. எச். மனோஜ்பாண்டியன் கலந்து கொண்டார். இந்த கபடி போட்டியானது 25-ந் தேதி இரவு தொடங்கி 26-ந் தேதி காலை 7 மணி வரை விடிய விடிய மின்னொளியில் நடைபெற்றது.

இதனை ஏராள மானவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டு கழகமும், இளையோர் நல இயக்கமும் செய்திருந்தனர்.

Tags:    

Similar News