உள்ளூர் செய்திகள்

 வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும்- வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் மனு

Published On 2023-04-06 09:19 GMT   |   Update On 2023-04-06 09:19 GMT
  • சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
  • அனைத்து பஸ்களும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார் ஆகி யோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு கொடுத்த னர்.

அதில் கூறியிருப்பதாவது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.

எனவே அதனை உடனடியாக திறக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து பேருந்துகளும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

சந்திப்பு பஸ் நிலையம்

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் ஏராள மான கடைகள் உள்ளது. இதனை நம்பி அவர்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்காக கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வரு கிறார்கள்.

எனவே இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடந்தாலும் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வந்தது.

ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவை நிறுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே பஸ் நிலையத்தை திறக்கும் வரை அனைத்து பஸ்களும் அங்கு சென்று வர நடவடி க்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், தொகுதி செயலாளர் கருப்ப சாமி, துணைத் தலைவர் ஸ்டீபன், செய்தி தொடர்பா ளர் பகவதி, சந்திப்பு வியா பாரிகள் சங்க தலைவர் பெர்னா ண்டோ, செயலா ளர் ரவீந்திரன், பொருளா ளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News