ஊத்தங்கரை அருகே இயற்கை பண்ணையம் அமைப்பது விவாசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் விவாசாய அலுவலர் .
ஊத்தங்கரை அருகே இயற்கை பண்ணையம் குறித்த விழிப்புணர்வு
- ஊத்தங்கரை அருகே இயற்கை பண்ணையம் குறித்து பயிற்சி வழங்கினர்.
- ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஆண்டியூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் காய்கறிப் பயிர்களில் இயற்கை பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் விவசாயிகள் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியானது சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு ஊத்தங்கரை வேளாண்மை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமை தலைமையில் நடைபெற்றது. அவர் பேசும் போது காய்கறிப் பயிர்களில் வேளாண்மை செய்வது குறித்தும் சாகுபடி செய்ய இயற்கை பண்ணையம் குறித்துப் பேசினார். மேலும் இயற்கை பண்ணையம் செய்வோருக்கு சான்றிதழ் வழங்குவது குறித்தும் விளக்கினார்.
மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஜோதி பேசும்போது விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பது குறித்தும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்ப குறித்தும் விளக்கினார். மேலும் ஊத்தங்கரை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ் குமார் நன்றி கூறினார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சாரதி செய்திருந்தார் .