உள்ளூர் செய்திகள்
சூளகிரி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உடல் மீட்பு
- எதிர்பாராத விதமாக தவறி ஆற்றில் விழுந்த அவரை வெள்ளநீர் அடித்து சென்றது.
- ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டது.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 47).விவசாயி.
இவர் கடந்த 30-ந்தேதி அந்த கிராமத்தின் அருகே காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்க்க சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஆற்றில் விழுந்துவிட்டார். அவரை வெள்ளநீர் அடித்து சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் மற்றும் ராயக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாதேசை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் பிணமாக மிதந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சூளகிரி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.